ஜூலை 6- நடிகை காஜல் அவர்வால் தெலுங்குபட அதிபரை காதலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் புதுப்படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். கமலஹாசன், பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்புகளையும் உதறிவிட்டார்.
பின்னர் ‘பழனி’, ‘மோதிவிளையாடு’, படங்களில் நாயகியாக நடித்து படிப்படியாக உயர்ந்தார். கார்த்தியுடன் ‘நான் மகான் அல்ல’, சூர்யாவுடன் ‘மாற்றான்’, விஜய்யுடன் ‘துப்பாக்கி’ படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
தற்போது கார்த்தி ஜோடியாக ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, விஜய் ஜோடியாக ‘ஜில்லா’ படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படம் எதுவும் கைவசம் இல்லை.
கமலஹாசன், பவன் கல்யாணுடன் நடிக்க மறுத்ததற்கு அதிக சம்பளம் தராதது காரணம் என முதலில் கூறப்பட்டது. இப்போது காதல் விவகாரத்தால்தான் அப்படங்களில் நடிக்க மறுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
காதலரான தெலுங்கு படஅதிபர் ஆந்திராவில் பெரும் பணக்காரராக இருக்கிறாராம். அவர் பெயரை ரகசியமாக வைத்துள்ளார்.