சிங்கப்பூர், பிப்.6- உலககோப்பை கால்பந்து போட்டி சூதாட்டத்தில் சிங்கப்பூர் தமிழர் ஒருவர் முக்கிய சூத்திரதாரியாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் நான்கு கண்டங்களில் அண்மைக் கால நடந்து உள்ள 680 கால்பந்து போட்டிகளில் சூதாட்டம் நடந்துள்ளதாக ஐரோப்பிய யூனியனின் விசாரணை அமைப்பான ‘யூரோ போல்’ தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் தமிழரான 45 வயது வில்சன் ராஜ் பெருமாள் என்பவர் இந்த சூதாட்டங்களின் முக்கிய நபர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது தலைமையில் இயங்கிய குழு ஒன்று சில ஐரோப்பிய தரகர்களின் உதவியுடன் இந்த சூதாட்டங்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலககோப்பை, யூரோ கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளிலும் சூதாட்டம் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூதாட்டத்தின் முக்கிய நபரான வில்சன் ராஜ் பெருமாளின் வெப் சைட் மற்றும் அவரது 13,000 இ-மெயில் ஆய்வு செய்ததில் சூதாட்டம் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூதாட்டம் வாயிலாக 11 மில்லியன் அமெரிக்க டாலர் வரை இந்தக் குழு சம்பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் 50 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.