Home நிகழ்வுகள் கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் பொங்கல் கலை இரவு

கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் பொங்கல் கலை இரவு

1062
0
SHARE
Ad

ponggalகோலசிலாங்கூர், பிப்.6- கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் 10. 2. 2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவும், தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஆலயத்திருமண மண்டப்பத்தில் பொங்கல் கலை இரவு மிக விமரிசையாக் கொண்டாடப்படவுள்ளது.

இவ்வாண்டும் கடந்த ஆண்டைப் போல பல்வேறு போட்டி விளையாட்டுகளும் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. அவ்வகையில், 50 மகளிர் பொங்கல் வைத்தல், பூச்சரம் தொடுத்தல், கோலம் போடுதல்,  இசை நாற்காலி, உறி அடித்தல், தேங்காய் உருட்டுதல், கயிறு இழுத்தல், தோரணம் பின்னுதல், மறை பொருள் தேடுதல், சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி, மிட்டாய் ஓட்டம், போத்தலில் நீர் நிரப்புதல் போன்ற பல்வகையான போட்டி விளையாட்டுகள் நடைப் பெறவுள்ளது.

மேலும், நமது இந்திய தற்காப்பு கலையும், இந்திய பாரம்பரிய கபடி விளையாட்டு கண்காட்சிகளும் நடைபெறவிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதற்கடுத்து, இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை அம்பாங் வளர்மதி இசைக்குழுவினரின் இன்னிசையுடன் பொங்கல் கலை இரவு நடைபெறும்.

எனவே, மிகச் சிறப்பாக நிகழவுள்ள இந்நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக வந்து போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிச் செல்ல ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் அழகின்றனர்.

மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள, நா. புருஷோத்தமன் (செயலாளர்) 016- 674 1957, மு.க வேலாயுதம் (துணைச் செயலாளர்) 013- 280 9994, (நிர்வாக உறுப்பினர்கள்) மகாவிஷ்ணு 013-394 0061 மற்றும் ப. பாஸ்கரன் 012- 644 7485.