அதனையடுத்து, அவர் மேற்கு லண்டனில் பட்டிங்டனில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அரண்மனையில் இருந்து அவர் கார் மூலம் அழைத்து செல்லப்பட்ட போது கணவர் இளவரசர் வில்லியமும் உடன் சென்றார்.
இந்நிலையில், செயின்ட் மேரீஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கேத் மிடில்டனிற்கு, மாலை 4.24 மணியளவில்,அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இளவரசிக்கு குழந்தை பிறந்தது பற்றிய செய்தி தெரிய வந்தவுடன் பிரிட்டன் முழுவதும் தற்போது உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளது.
Comments