Home இந்தியா டெசோ அமைப்பு சார்பில் சென்னையில் 8–ந் தேதி கருணாநிதி ஆர்ப்பாட்டம்

டெசோ அமைப்பு சார்பில் சென்னையில் 8–ந் தேதி கருணாநிதி ஆர்ப்பாட்டம்

687
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 23– தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

“டெசோ” கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை நிறைவேற்றிட வலியுறுத்தி வருகிற 8.8.2013 வியாழக்கிழமை அன்று கழக மக்களவை–மாநிலங்களவை உறுப்பினர்கள் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., தலைமையில் புதுடெல்லி, நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

karuna-cabinet-1805_630தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலை நகரங்களில் நடைபெறும் “தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில்” கலந்து கொள்வோர் விவரம் பின்வருமாறு:–

#TamilSchoolmychoice

சென்னை – தலைவர் கருணாநிதி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மதுரை– வீரமணி, திருச்சி– பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர்–தொல்.திருமாவளவன் எம்.பி., கோவை–சுப்புலட்சுமி ஜெகதீசன், காஞ்சீபுரம்– துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், உதகை–கோவை மு.ராம நாதன், திருப்பூர்–ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, நாகப்பட்டினம்–அ.ரகுமான்கான், திண்டுக்கல்–திருச்சி என்.சிவா, திருநெல்வேலி–பொன்.முத்துராமலிங்கம், ராமநாதபுரம்–கடலூர் இள.புகழேந்தி, விருதுநகர்–பேரூர் அ. நடராஜன்,

தஞ்சாவூர்–குஷ்பு சுந்தர், நாமக்கல்–வாகை சந்திரசேகர், அரியலூர்–நடிகர் குமரிமுத்து, ஈரோடு–திண்டுக்கல் ஐ.லியோனி, விழுப்புரம்–தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., திருவண்ணாமலை–கம்பம் பெ.செல்வேந்திரன், கரூர்– எம்.ஏ.நூர்ஜகான் பேகம், தேனி–வழக்கறிஞர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன், திருவாரூர்–வி.பி.ராஜன், தருமபுரி வடக்கு–தஞ்சை கூத்தரசன், தருமபுரி தெற்கு–சங்கரி நாராயணன் புதுக்கோட்டை– குத்தாலம் கல்யாணம், பெரம்பலூர்– விஜயா தாயன்பன், தூத்துக்குடி– கம்பம் ராம கிருஷ்ணன், எம்.எல்.ஏ., நாகர்கோவில்– கோவி.செழியன், எம்.எல்.ஏ., சிவகங்கை– நெல்லிக்குப்பம் புகழேந்தி.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்நாள்– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னணியினர் பங்கேற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.