இலண்டன் – பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசான இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டன் மற்றும் தங்களின் மூன்று குழந்தைகளுடன் பொழுதை உல்லாசமாகக் கழிக்க அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டம் ஒன்றில் தாங்களும் குழந்தைகளாக மாறி விளையாடும் காட்சிகளை தங்களின் அதிகாரத்துவ சமூக ஊடகங்களில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.
“இயற்கைக்குத் திரும்புவோம்” என்ற பெயரோடு சிறந்த தோட்டக்கலை நிபுணர்களையும், வடிவமைப்பாளர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தோட்டத்தை உருவாக்குவதிலும் வடிவமைப்பதிலும் இளவரசி கேட் மிடில்டனும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கவிருக்கும் புகழ்பெற்ற இலண்டனின் செல்சி மலர் கண்காட்சியை முன்னிட்டு இந்தத் தோட்டம் திறப்பு விழா காண்கிறது. குழந்தைகள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்காமல் வெளியே சென்று விளையாட வேண்டும், இயற்கையை நேசிக்க வேண்டும், இரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இளவரசர் வில்லியம் – மிடில்டன் தம்பதியரின் ஒரு வயது நிறைவு காணும் மூன்றாவது மகன் நடை பயிலும் காட்சியையும் இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன.
அந்தப் புகைப்படங்களில் சில உங்களின் பார்வைக்கு:
படங்கள் நன்றி: Kensington Royal Twitter page