ஜோகூர் பாரு – புனித நோன்புப் பெருநாளின்போது தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம பணிகளுக்காக முஸ்லீம்கள் தானம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் தனது பங்காக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அல்மார்ஹூம் சுல்தான் இஸ்கண்டார் 5 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியுள்ளார்.
ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா பாசிர் பெலாங்கியில் நடைபெற்ற எளிமையான சடங்கொன்றில் ஜோகூர் சுல்தான் இந்தத் தொகையை ஜோகூர் இஸ்லாமிய விவகாரங்களுக்கான மன்றத்தின் ஆலோசகர் டத்தோ நூஹ் கடோட்டிடம் வழங்கினார்.
இதே நிகழ்ச்சியில் மெர்சிங், முக்கிம் ஜெமாலுவாங் என்ற இடத்தில் உள்ள 1,024.487 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தையும் சமூக நல நடவடிக்கைகளுக்காகவும், ஒரு பள்ளிவாசல் கட்டவும் ஜோகூர் சுல்தான் தானமாக வழங்கினார்.
படம்: நன்றி – ஜோகூர் சுல்தான் அதிகாரத்துவ பக்கம்