Home Photo News பாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்

பாகிஸ்தான் வருகை: வித்தியாச ஆடைகளில் கேட் மிடில்டன் – கிரிக்கெட் விளையாடிய வில்லியம்

972
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் – கடந்த வாரம் முழுவதும் சமூக ஊடகங்களைக் கவர்ந்த – புகைப்படங்களால் நிரம்பி வழிந்த – செய்தி, பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேட் மிடில்டனோடு பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட வருகைதான்.

வழக்கமாக தனது நவீன ஆடை அணிகலன்களால் உலக மக்களைக் கவரும் கேட் மிடில்டன் பாகிஸ்தானில் கடைப்பிடிக்கப்படும் இஸ்லாமிய – பாரம்பரிய – பண்பாட்டுக்கு ஏற்ப, நவீனமயமான அதே வேளையில் உள்நாட்டு கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும், சல்வார் கம்மீஸ் போன்ற ஆடைகளில் வலம் வந்து பாகிஸ்தானியர்களையும், உலக மக்களையும் கவர்ந்தார்.

இன்னொரு புறத்தில் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களுக்கு தனது மனைவியோடு வருகை புரிந்த இளவரசர் வில்லியம் சாதாரண மக்களோடு சரிசமமாகப் பழகி நெகிழ வைத்தார்.

#TamilSchoolmychoice

வில்லியம், கேட் மிடில்டன் இருவரும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த காட்சிகள் அனைவரையும் கவர்ந்த மற்றொரு அம்சம்.

பல புகைப்படங்களை அரச தம்பதியரே பதிவிட்டு இணையவாசிகளுடன் பகிர்ந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த அழகான படக்காட்சிகளை இங்கே காணலாம்: