Home இந்தியா நரேந்திர மோடியின் அரசியல் நாட்டு ஒற்றுமைக்கு எதிரானது: ராகுல்காந்தி கடும் தாக்கு

நரேந்திர மோடியின் அரசியல் நாட்டு ஒற்றுமைக்கு எதிரானது: ராகுல்காந்தி கடும் தாக்கு

546
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூலை 30– பாராளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்காக ராகுல்காந்தி மாநிலம் வாரியாக காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து பேசி வருகிறார்.

rahul-gandhi1நேற்று குஜராத் காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:–

குஜராத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். முக்கிய பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

மக்கள் நல திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசு குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

நரேந்திர மோடி பற்றியும் அவரது செயல்பாடு பற்றியும் அடுத்த 3 மாதத்துக்கு மக்களிடம் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும். குறிப்பாக மோடி செய்யும் அரசியல் நாட்டு ஒற்றுமைக்கு எதிரானது என்பதை சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் நிர்வாகிகள் செய்யும் இந்த பிரசாரம்தான் முக்கியமானது. மாநிலத்தில் உள்ள அடிமட்ட கிளை வரை இந்த உணர்வை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.