Home அரசியல் நாய் பயிற்றுநர் காணொளி விவகாரத்தில் கருத்து கூறிய முகைதீன் மீது ஜசெக புகார்!

நாய் பயிற்றுநர் காணொளி விவகாரத்தில் கருத்து கூறிய முகைதீன் மீது ஜசெக புகார்!

692
0
SHARE
Ad

Muhyiddin-Yassinகோலாலம்பூர், ஆகஸ்ட் 2 – நாய் பயிற்றுநர் மஸ்னா வெளியிட்ட காணொளி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட துணைப்பிரதமர் முகைதீன் யாசின் மீது ஜசெக புகார் அளித்துள்ளது.

தாமான் செகாம்புட் ஜசெக கிளைத்தலைவர் யாவ் ஜியா ஹாவுர் இன்று காலை கோலாலம்புரிலுள்ள ஜிஞ்ஜாங் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து ஜியா தனது புகாரில் கூறியிருப்பதாவது, வன்முறையைத் தூண்டும் படியான கருத்தை வெளியிட்ட முகைதீன் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், அந்த காணொளியை வெளியிட்டவர் இஸ்லாமைச் சேர்ந்தவர் என்று உறுதிப்படுத்துவதற்கு முன்,“இஸ்லாம் மீதும், அதன் உணர்வுகள் மீதும் சிலர் கொடுமை நடத்தியிருக்கிறார்கள்” என்று முகைதீன் கூறியிருப்பது மலேசிய மக்களிடையே வேறுபாட்டை உருவாக்கியிருக்கிறது.

புத்ரஜெயாவில் நடந்த நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முகைதீன், இஸ்லாம் மதத்தை மற்ற மதத்தவர்கள் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாகவும், ஆனால் இஸ்லாம் மதத்தினர் யாரையும் அவமதிப்பது இல்லை என்றும் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், மலேசிய இந்தியர் முன்னேற்ற சங்கமும் (MIPAS) நாளை முகைதீன் மீது புகார் அளிக்கப்போவதாகக் கூறப்படுகிறது.