Home இந்தியா நரேந்திரமோடி பிரதமர் ஆவார்: யஷ்வந்த் சின்கா பேட்டி

நரேந்திரமோடி பிரதமர் ஆவார்: யஷ்வந்த் சின்கா பேட்டி

693
0
SHARE
Ad

புதுடெல்லி, ஆக. 2– பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் தீவிர ஆதரவாளராக கருதப்படுபவர் யஷ்வந்த் சின்கா. சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் பா.ஜ.க. தேசிய மாநாடு நடந்த போது அத்வானிக்கு ஆதரவாக யஷ்வந்த் சின்காவும் கூட்டத்தை புறக்கணித்தார்.

M_Id_380073_Narendra_Modiகுஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. வில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அவர் மறைமுகமாக எதிர்த்தார். ஆனால் தற்போது திடீரென யஷ்வந்த் சின்கா நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மோடிக்கு ஆதரவாக அவர் கருத்துக்களை வெளியிடத் தொடங்கியுள்ளார். நேற்று அவர் மேற்கு வங்க மாநிலம் ராம்கர் நகரில் நிருபர்களிடம் பேசும் போது கூறியதாவது:–

#TamilSchoolmychoice

இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர மோடி தான். தற்போதைய சூழ்நிலையில் மோடியை விட்டால் அந்த பதவிக்கு பொருத்த மானவர்கள் வேறு யாரும் இல்லை.

எனவே வரும் பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்பார் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு யஷ்வந்த் சின்கா கூறினார்.

யஷ்வந்த் சின்காவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பா.ஜ.க.வில் உள்ள மற்ற தலைவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.