Home இந்தியா பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ கைது

பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ கைது

654
0
SHARE
Ad

திருச்சி, ஆக. 2- பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் திருச்சி விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.

திருச்சிக்கு இன்று வருகை தரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கறுப்புக் கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்துக்கு வைகோ மற்றும் சில கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

#TamilSchoolmychoice

திருமயத்தில் பாரத மிகுமின் நிறுவனத்தின் ஒரு ஆலையை தொடங்கி வைக்க பாரத பிரதமர் மன்மோகன் சிங் இன்று டெல்லியில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருமயத்திற்கு சென்றார்.

2008102458440101இதனிடையே தமிழகத்தில் பல பிரச்னைகள் இருக்கும்போது அதற்கெல்லாம் செவி சாய்க்காத பிரதமர், திருமயத்தில் உள்ள ஒரு ஆலையை தொடங்கி வைக்க வருவதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அவர்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேச பொதுவுடையை கேட்சித் தலைவர் மணியரசன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட நூற்றுக்கணக்கோனார் திருச்சி விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.

இந்நிலையில் பிரதமர் வந்தபோது கறுப்புக் கொடி காட்ட முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் விமான நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல், திருமயத்தில் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட இருந்த நாம் தமிழர் கட்சியினர் மற்றும் விவசாயிகள் சுமார் 250 பேரை போலீசார் கைது செய்தனர்.