Home வணிகம்/தொழில் நுட்பம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனம் கைமாறுகின்றது

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனம் கைமாறுகின்றது

651
0
SHARE
Ad

வாஷிங்டன், ஆக.6- அமெரிக்காவில் பிறந்த ஜெப் பிசோஸ் என்று அழைக்கப்படும் ஜெப்ரி பிரிஸ்டன் (படம்), அமேசான்.காம் என்ற இணையத்தள வர்த்தக நிறுனத்தின் தலைவரும், முக்கிய தலைமை நிர்வாகியும் ஆவார்.

Jeff Bezosபுத்தக விற்பனையில் தொடங்கிய இந்த நிறுவனம், இவரது வழிகாட்டுதலில் நாளடைவில் பல தயாரிப்புகளின் இணையத்தள விற்பனையில் உலகளவில் பெரிய சில்லறை விற்பனை நிறுவனமாக மாறியுள்ளது.

இவர் தற்போது அமெரிக்காவின் முக்கியத்துவம் நிறைந்த வெளியீடுகளில் ஒன்றான வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தை 80 ஆண்டுகளாக அதனை நடத்திவந்த கிரஹாம் குடும்பத்தினரிடமிருந்து 250 மில்லியன் டாலருக்கு வாங்கி ஆச்சரியம் அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

Earns Washington Postஇதற்கு முன்னால், நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் 70 மில்லியன் டாலருக்கு பாஸ்டன் குளோப் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.

தற்போது வாஷிங்டன் போஸ்டும் விற்கப்பட்டுள்ளது, செய்தித்தாள்களின் விளம்பர வருவாய் மற்றும் வாசகர்கள் சரிவு போன்று பத்திரிகைத்துறை எதிர்நோக்கியுள்ள சவால்களை வெளிப்படுத்துகின்றது.

ஆயினும், இந்த விற்பனைத் தகவல், கடந்த ஐந்து வருடங்களில் பங்கு சந்தையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதன் மதிப்புகளை 599.85 டாலர்களாக உயர்த்தியுள்ளது.

Washington Post Earningsஇது தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் முயற்சி என்று தெரிவித்த ஜெப்ரி பத்திரிகைத்துறையில் தான் தொலைநோக்கு முயற்சியுடன் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆயினும், பத்திரிகையின் பாரம்பரியம் மாறாமலும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலும், தலைநகர் வாஷிங்டனிலும் இந்தப் பத்திரிகையின் பங்கு தனக்குத் தெரியும் என்றும், இதன் மதிப்பு ஒருநாளும் மாறாது என்றும் பத்திரிகையின் இணையதளத்தில் அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில் ஜெப்ரி உறுதியளித்துள்ளார்.