Home கலை உலகம் ரசிகர் தற்கொலை: வேதனையில் துடித்து போய்விட்டேன்- விஜய் உருக்கம்

ரசிகர் தற்கொலை: வேதனையில் துடித்து போய்விட்டேன்- விஜய் உருக்கம்

639
0
SHARE
Ad

சென்னை, ஆக. 12– ரசிகர் தற்கொலையால் வேதனையில் துடித்துப்போய் விட்டேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:–

Thalaiva Movie Stills1கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர் தலைவா படம் பார்க்க முடியவில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டதும் துடித்துபோய்விட்டேன். வாழ வேண்டிய ஒரு இளம் தளிர் இன்று சருகாகி கிடக்கிறது. என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனை தினமாக இதை கருதுகிறேன்.

#TamilSchoolmychoice

விஷ்ணுகுமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாதவனாய் தவிக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனும் எனது சகோதரன். உங்களை நான் நேசிப்பது போல் நீங்களும் என்னை நேசிப்பது உண்மையென்றால் இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நடக்கக்கூடாது என்பதை அன்போடும், கண்டிப்போடும் உங்கள் சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.