Home இந்தியா கோடநாட்டில் இருந்து ஜெயலலிதா இன்று சென்னை திரும்புகிறார்

கோடநாட்டில் இருந்து ஜெயலலிதா இன்று சென்னை திரும்புகிறார்

453
0
SHARE
Ad

சென்னை, ஆக.12-கோடநாட்டில் இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) சென்னை திரும்புகிறார். ‘‘முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோடநாட்டில் சில வாரங்கள் தங்கியிருந்து அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனிப்பார்’’ என்று தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் தெரிவித்தது. அதன்படி,

jeya_1039813gமுதல்-அமைச்சர் ஜெயலலிதா ஜூன் 28-ந்தேதி சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு புறப்பட்டு சென்றார். அங்கிருந்தபடியே முதல்- அமைச்சர் ஜெயலலிதா அரசு பணிகளை கவனித்து வந்தார். அவ்வப்போது அரசு தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முக்கிய பிரச்சினைகளில் உடனுக்குடன் முடிவு எடுத்து செயல்படுத்தினார்.

அத்துடன் வழக்கமான அரசு பணிகளையும் செவ்வனே மேற்கொண்டார். 44 நாட்களுக்கு பிறகு கோடநாட்டில் இருந்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பகல் சென்னை திரும்புகிறார். கோடநாட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று பகல் 1 மணியளவில் கோவை வரும் முதல்-அமைச்சர், பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார்.

#TamilSchoolmychoice

முதல்-அமைச்சர் கோடநாட்டில் இருந்து கோவைக்கு வரும்போதும், அங்கிருந்து சென்னை வருகின்ற போதும் சிறப்பான வரவேற்பு கொடுக்க அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராக உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.

அதுபோல விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சரின் வீடு அமைந்துள்ள போயஸ் தோட்டம் வரை சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக கூடி நின்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி வழி நெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.