சென்னை, ஆக. 12– ரசிகர் தற்கொலையால் வேதனையில் துடித்துப்போய் விட்டேன் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:–
விஷ்ணுகுமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாதவனாய் தவிக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரசிகனும் எனது சகோதரன். உங்களை நான் நேசிப்பது போல் நீங்களும் என்னை நேசிப்பது உண்மையென்றால் இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நடக்கக்கூடாது என்பதை அன்போடும், கண்டிப்போடும் உங்கள் சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.