Home நாடு நாட்டிலுள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை மொத்தம் 2,60,000 – சாஹிட் கூறுகிறார்

நாட்டிலுள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை மொத்தம் 2,60,000 – சாஹிட் கூறுகிறார்

641
0
SHARE
Ad

Zahid-Hamidi1கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – அவசர கால சட்டம் அகற்றப்பட்டதன் காரணமாக நாட்டில் குறைந்தது 2 லட்சத்து 60,000 குற்றவாளிகள் இருப்பதாக உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி கூறுகிறார்.

“கடந்த 2011 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டம் பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த எதிர்ப்பால் அகற்றப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜோகூரில் உள்ள சிம்பாங் ரெங்கம் தடுப்பு முகாமில் 2,600 குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவசரகால சட்டம் அகற்றப்பட்டதால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்”

“இந்த 2,600 குற்றவாளிகளுக்கும் குறைந்தது 10 கூட்டாளிகள் இருப்பார்கள். அவர்களையும் கணக்கில் சேர்த்தால் மொத்தம் 26,000 பேர் இருக்கிறார்கள். இந்த 26,000 பேருக்கும் தலா 10 கையாட்கள் வீதம் வைத்துக்கொண்டால் மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் குற்றவாளிகள் உள்ளார்கள்” என்று சாஹிட் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இவர்கள் அனைவரும் நாட்டில் தாராளமாக நடமாடுகிறார்கள் என்றும், இவர்களால் தான் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன என்றும் சாஹிட் கூறியுள்ளார்.

“இந்த குற்றவாளிகள் அனைவரும் ஒடுக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்துவருகிறது. அவசரகாலச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்று எதிர்கட்சிகள் நெருக்குதல் அளித்தன. ஆனால் அதன் பின்விளைவுகள் இவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை” என்று சாஹிட் தெரிவித்துள்ளார்.