Home அரசியல் “லீ குவான் இயூவின் எண்ணங்கள் நடைமுறை காலத்திற்கு ஏற்றவை அல்ல” – அன்வார்

“லீ குவான் இயூவின் எண்ணங்கள் நடைமுறை காலத்திற்கு ஏற்றவை அல்ல” – அன்வார்

524
0
SHARE
Ad

lee-kuan-yewகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – மலேசிய அரசியல் குறித்து சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ மற்றும் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்து குறித்து எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

லீ குவான் இயூ வின்  “ஒரு மனிதனின் பார்வையில் உலகம்” என்ற நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் குறித்து அன்வாரிடம் கேட்கப்பட்ட போது, மலேசிய அரசியல் குறித்து மூத்த தலைவரின் பார்வையில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் நடைமுறையில் இல்லாதவை என்று அன்வார் பதிலளித்துள்ளார்.

“குவான் இயூவைப் பொறுத்தவரை அவரிடம் போதுமான புரிந்துணர்வு இல்லை. அதே நேரத்தில் நஜிப்பைப் பொறுத்தவரை மலேசிய மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பிரச்சனைக்களை தீர்க்கும் ஆற்றல் இல்லை” என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், லீ குவான் இயூவின் எண்ணங்கள் மகாதீரின் காலத்திலேயே இருக்கிறது. அவை காலம் கடந்து போய்விட்டன என்றும், அடிப்படை உரிமை மற்றும் இனம் ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாட்டை மட்டுமே லீ குவான் இயூ பார்க்கிறார் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

லீ குவான் இயூவின் எண்ணங்கள் ‘தற்போதைய நடைமுறை காலத்திற்கு ஏற்றவையாக இல்லை’ என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட லீ குவான் இயூவின், “ஒரு மனிதனின் பார்வையில் உலகம்” என்ற புதிய புத்தகத்தில், “மலேசிய அரசியலில் நிலவும் இனவாதக் கொள்கைகள் எல்லா இனங்களிலும் உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஆற்றலை சுருக்கிவிடுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.