ஆக. 19- நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகளில் திரையிட முடியவில்லை.
ஊடகங்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார்.
என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு திரையரங்குகளில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.