Home வணிகம்/தொழில் நுட்பம் இரண்டு திரைகளுடன் சாம்சங் கைப்பேசி அறிமுகம்!

இரண்டு திரைகளுடன் சாம்சங் கைப்பேசி அறிமுகம்!

518
0
SHARE
Ad

galaxy-golden_001கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 – சென்ற வாரம், சாம்சங் நிறுவனம், தன் மொபைல் போன் வடிவமைப்பில் புதுமை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் காலக்ஸி கோல்டன் (SHVE400) எனப் பெயரிடப்பட்ட பிளிப் வகை மொபைல் போனில் இரண்டு திரைகளைத் தந்துள்ளது.

இதன் மேலாக ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள்ளாக ஒரு திரையும் தரப்பட்டுள்ளன. இரண்டும் 3.7 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் சூப்பர் AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. எனவே, போனை மூடிவிட்டாலும், மேல்புறமாக உள்ள திரையைப் பயன்படுத்தலாம்.

உள்புறமாக உள்ள, திரை கீ போர்டுடன் இயங்குகிறது. இந்த போனில் 1.7 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட ப்ராசசர் இயங்குகிறது.ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது. 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் துணையுடன் செயல்படுகிறது.

#TamilSchoolmychoice

முன்புறமாக 1.9 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. இன்னும் பல சிறப்பு வசதிகளும் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாணம் 118 x 59.5 x 15.8 மிமீ ஆகும். எடை 179 கிராம். எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகியவை இயங்குகின்றன.

இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1,820mAh திறன் கொண்டதாகும். சென்ற வாரம் முதல் கொரியாவில் விற்பனை செய்யப்படும் இந்த போன், விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப் படலாம்.

Click Here