Home இந்தியா தமிழ், தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி வருகிறார் ராஜபக்சே – கருணாநிதி

தமிழ், தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி வருகிறார் ராஜபக்சே – கருணாநிதி

695
0
SHARE
Ad

karunanithiசென்னை, பிப்.8- தமிழ், தமிழர்களை அழிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே கங்கணம் கட்டி செயல்படுவதாக, சென்னையில் நடந்த கறுப்புச்சட்டை போராட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே, 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.

பீகார் மாநிலம் புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் அவர் சாமி தரிசனம் செய்கிறார்.

#TamilSchoolmychoice

தனிப்பட்ட முறையிலான பயணம் என்பதாலும், ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் போராட்டம் அறிவித்திருப்பதாலும் அவரது பயண விபரம் முறையாக வெளியிடப்படவில்லை.

முன்னதாக, ராஜபக்சே டில்லிக்கு வந்து அங்கிருந்து புத்த கயா செல்வதாக இருந்தது. ஆனால் போராட்டங்கள் காரணமாக அந்த பிளான் மாற்றப்பட்டு, ஒடிசா மாநிலம் கட்டாக் சென்று, அங்கிருந்து புத்த கயா செல்கிறார் ராஜபக்சே. இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து திருப்பதி வழியாக சாலை மார்க்கமாக திருமலை செல்கிறார்.

இன்றிரவு திருமலையில் தங்கும் ராஜபக்சே, நாளை காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை காலை 9.30 மணியளவில் திருப்பதியிலிருந்து கிளம்புகிறார்.

தி.மு.க., போராட்டம்: ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தி.மு.க., வினர் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் கறுப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி பேசுகையில், இலங்கை தமிழர்களை பூண்டோடு அழிக்க விரதம் பூண்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வருவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களின் கலை, கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு, மொழி ஆகியவை கங்கணம் கட்டிக்கொண்டு அழிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பயணம், தனிப்பட்ட முறையிலானது என்பதால் அவர் இந்திய தலைவர்களை சந்திக்க மாட்டார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கு மட்டுமே அவர் செல்வார் என்றும், தமிழ் அமைப்புகளின் போராட்டம் காரணமாக அதிபர் ராஜபக்சேவிற்கு இந்தியா பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, ராஜபக்சே டில்லி வந்து, விரைவில் அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதிராக ஐ.நா., சபையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த பிளான் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.