Home நாடு குற்றத்தடுப்பு சட்டதிருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம் – சாஹிட் எச்சரிக்கை

குற்றத்தடுப்பு சட்டதிருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம் – சாஹிட் எச்சரிக்கை

588
0
SHARE
Ad

zahid-hamidiகோலாலம்பூர், அக் 1 – குற்றத்தடுப்பு சட்டத்தில் கொண்டுவரப்போகும் திருத்தத்தை எதிர்த்து அரசு சாரா இயக்கங்கள் குரல் கொடுப்பது குற்றவாளிகளுக்கு சாதகமான சூழ்நிலையாக மாறிவிடக்கூடாது என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குற்றத்தடுப்பு சட்ட திருத்தத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து புத்ர ஜெயாவில் இன்று செய்தியாளர்களுக்குப் பதிலளித்த சாஹிட், “அரசு சாரா இயக்கங்கள், சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் என குற்றத்தடுப்பு சட்ட திருத்தத்திற்கு எதிராகப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அது குற்றவாளிகளை பாதுகாப்பு போன்றதாகும்” என்று தெரிவித்தார்.

“நாட்டில் நடக்கும் குற்றங்களை ஒடுக்கும் நோக்கத்தோடு தான் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அரசாங்கத்தின் முடிவுகளுக்கு அரசு சாரா இயக்கங்களும், வழக்கறிஞர்களும் மதிப்பளிக்க வேண்டும்” என்றும் சாஹிட் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த சட்டதிருத்தத்தின் மூலம் சந்தேகப்படும் நபர்களை விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கலாம்.

ஏற்கனவே விசாரணையின்றி தடுத்து வைக்கும் அதிகாரம் கொண்டு உள்நாட்டு பாதுகாப்பு சட்டம், அவசர கால சட்டம் போன்றவை கடும் விமர்சனத்திற்குள்ளாகி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.