Home கட்சித் தேர்தல்கள் வாக்குகளை விற்காதீர்கள்! வேண்டாத தலைவர்களை தூக்கி எறியுங்கள்! – தெங்கு அட்னான்

வாக்குகளை விற்காதீர்கள்! வேண்டாத தலைவர்களை தூக்கி எறியுங்கள்! – தெங்கு அட்னான்

705
0
SHARE
Ad

tengkuகோலாலம்பூர், அக் 1 –  எதிர்வரும் அம்னோ தேர்தலில், கட்சி உறுப்பினர்கள் தங்களின் வாக்கை விற்க வேண்டாம் என்றும், தங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத தலைவர்களை அவர்கள் தாராளமாகப் புறக்கணிக்கலாம் என்றும் அம்னோ பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் மன்ஸோர் கூறியுள்ளார்.

அம்னோ இணையதளத்திற்கு தெங்கு அட்னான் அளித்த பேட்டியில், “நாம் வாக்குகளை விற்பதாக இருந்தால் அதற்கு ஒரு விலையுண்டு. ஆனால் அதன் முடிவு தான் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “இது போன்ற முறைகேடுகளுக்குக் காரணம் அம்னோ கட்சி அல்ல. அதிலுள்ள சில தலைவர்கள் உயர்ந்த பதவிகளின் மீது கொண்டுள்ள பேராசை தான் அதற்குக் காரணம்” என்று தெங்கு அட்னான் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“நமக்கு நன்மை செய்யாத தலைவரை நீங்கள் தாராளமாக குப்பையில் தூக்கி எறியலாம். மாறாக நீங்கள் உங்கள் வாக்கை விற்கும் பட்சத்தில், அந்த தலைவர் தான் விலை கொடுத்து அப்பதவியை வாங்கினேன். நான் எதற்கு மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்பார். அம்னோ கட்சி வெளிப்படையானது, அதில் யார் வேண்டுமானாலும் போட்டியிட்டு வென்று உயர்ந்த பதவியை அடையலாம்” என்றும் தெங்கு அட்னான் தெரிவித்துள்ளார்.