இது குறித்து சுப்ரமணியம் கூறுகையில், “கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு சோதிநாதன் எடுத்திருக்கும் முடிவு சரியானதாகும். அவரது முடிவு கட்சியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. கட்சியில் ‘தலைவர் அணி’ என்பது கிடையாது என்று டத்தோஸ்ரீ பழனிவேல் அறிவித்திருப்பது கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும்” என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் போட்டியிடுவது என்பது அவரவர் தனிப்பட்ட முடிவு என்றும், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது பேராளர்களின் முடிவு என்றும் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.