இதனிடையே கட்சியின் மாநிலப் பேராளர் மாநாடு இன்று நவம்பர் 7 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி வரும் நவம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை நடைபெறவுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு கெடா மாநிலப் பேராளர் மாநாடு நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு பினாங்கு மாநிலப் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது.
நாளை நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தேசிய இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் இரவு 8 மணியளவில் கூட்டரப் பிரதேச பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது.
வரும் நவம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமை, காலை 10 மணிக்கு சிலாங்கூர் மாநிலப் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது.
வரும் நவம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஜோகூர் மாநிலப் பேராளர் மாநாடும், மாலை 4 மணிக்கு மலாக்கா மாநிலப் பேராளர் மாநாடும், இரவு 8 மணிக்கு நெகிரி செம்பிலான் மாநிலப் பேராளர் மாநாடும் நடைபெறவுள்ளது.