மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் சார்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிகேஆர் கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சனி அப்துல் ஹமீத், தொழிற்சங்கங்களின் தலைமை இயக்குனருக்கு எதிராக தேசிய வங்கி ஊழியர் சங்கம் தொடுத்திருந்த வழக்கில் அமைச்சர் தப்பான அறிக்கையை சமர்ப்பித்தார் என்று தெரிவித்தார்.
மேலும் மலாயா வங்கியுடன் கூட்டாக சங்கம் அமைக்கும் தொழிற்சங்கங்களின் தலைமை இயக்குனரின் பதிவை எதிர்த்து தேசிய வங்கி ஊழியர் சங்கம் தாக்கல் செய்த வழக்கை கடந்த நவம்பர் 7 ஆம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பு வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி,தொழிற்சங்கங்களின் தலைமை இயக்குனருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பை முடிவு செய்து விட்டதாக அனைத்துலக தொழிலாளர் சங்கத்திடம் சுப்ரமணியம் தவறான அறிக்கை சமர்ப்பித்து விட்டதாக மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்-ன் தலைவர் காலித் அடான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அனைத்துலக தொழிலாளர் சங்கத்திடம் இந்த தவறான அறிக்கையை சமர்ப்பித்த சமயத்தில் சுப்ரா மனிதவள அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.