Home நாடு ஜனவரியில் சொத்து மதிப்பீட்டு வரி உயரும் – தெங்கு அட்னான் உறுதி

ஜனவரியில் சொத்து மதிப்பீட்டு வரி உயரும் – தெங்கு அட்னான் உறுதி

609
0
SHARE
Ad

20121029_peo_tengku-adnan-tengku-mansor-2_msy_1கோலாலம்பூர், நவ 28 – சொத்து மதிப்பீட்டு வரியின் திருத்தியமைக்கப்பட்ட அறிக்கைகள் அனைத்தும் இம்மாதத்தில் சொத்து உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. புதிய மதிப்பீட்டு வரியை அடிப்படையாகக் கொண்ட அறிக்கைகள் வரும் ஜனவரி மாதத்தில் அனுப்பப்பட்டுவிடும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர்(படம்) இன்று அறிவித்தார்.

ஆனால் சொத்து உரிமையாளர்கள் அனைவரும் உடனடியாக வரி செலுத்தத் தேவையில்லை என்றும், அவர்கள் மார்ச் மாதம் வரை காத்திருக்கலாம் என்றும் அட்னான் குறிப்பிட்டார்.

“தங்கள் வரியை ஜனவரி மாதத்தில் கட்டுவதும், மார்ச் மாதம் வரை தள்ளி வைப்பதம் அவரவர் விருப்பம். அதற்காக அபராதம் எதுவும் விதிக்கப்படமாட்டாது” என்று ஜாலான் செகாம்புட்டில் 48 மில்லியன் பாலம் கட்டும் பணியைத் தொடங்கி வைக்க வந்த அட்னான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சரான லோக பாலன் மோகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.