Home வணிகம்/தொழில் நுட்பம் கெந்திங் மலையில் 1 பில்லியன் ரிங்கிட் செலவில் உல்லாச கேளிக்கை மையம்!

கெந்திங் மலையில் 1 பில்லியன் ரிங்கிட் செலவில் உல்லாச கேளிக்கை மையம்!

727
0
SHARE
Ad

Genting-Highland-photoடிசம்பர் 18, கெந்திங் – மலேசியாவின் புகழ் பெற்ற உல்லாச மையமான கெந்திங் மலையில் 1 பில்லியன் ரிங்கிட் செலவில் புகழ் பெற்ற அமெரிக்க கேளிக்கை நிறுவனமான ட்வெண்டியத் செஞ்சுரி ஃபோக்ஸ் நிறுவனத்தின் கேளிக்கை மையம் (Twentieth Century Fox World theme park) அமைக்கப்படும் என்றும் அதனை முன்னிட்டு அடுத்த 10 ஆண்டுகளுக்கான மாபெரும் மறு சீரமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த திட்டத்தின் கீழ் கெந்திங் மலையிலுள்ள தங்கும் விடுதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், புதிய நிர்மாணிப்புகள், ஆகியவையும் மேம்படுத்தப்படும் என்பதோடு விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

தற்போதுள்ள ஃபர்ஸ்ட் வோர்ல்ட் தங்கும் விடுதியின் அருகில் 1,300 அறைகளைக் கொண்ட மூன்று நட்சத்திர புதிய தங்கும் விடுதி ஒன்றும் கட்டப்படும். 10,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய மேடை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் ஒன்றும் அமைக்கப்படும்.

மலேசியாவின் சுற்றுப் பயணத் தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக கெந்திங் குழுமத்தின் தலைவரும் தலைமைச் செயல்முறை அதிகாரியுமான டான்ஸ்ரீ லிம் கோக் தே அறிவித்துள்ளார்.

இந்த சீரமைப்புத் திட்டம் மற்றும் ட்வெண்டியத் செஞ்சுரி நிறுவனத்தின் உல்லாச கேளிக்கை மையத்தின் நிர்மாணிப்புகளின் அறிமுகத் திட்டத்தை பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 4 பில்லியன் ரிங்கிட் செலவிலான நிர்மாணிப்பு பணிகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உல்லாச கேளிக்கை மையம் 2016ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கும். ட்வெண்டியத் செஞ்சுரி நிறுவனம் தயாரித்த புகழ்பெற்ற ஆங்கில திரைப்படங்களின் கருப் பொருளையும், அடையாளங்களையும் இந்த கேளிக்கை மையம் கொண்டிருக்கும்.