Home நாடு விலைவாசி உயர்வால் நஜிப்பின் மதிப்பு 10 புள்ளிகள் சரிவு!

விலைவாசி உயர்வால் நஜிப்பின் மதிப்பு 10 புள்ளிகள் சரிவு!

472
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், டிச 19 – விலை உயர்வு, உதவித் தொகை குறைப்பு, நாட்டின் பொருளாதார திட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றங்கள் போன்றவற்றால் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தர மதிப்பீடு 52 சதவிகிதமாக குறைந்துள்ளது.

டிசம்பர் மாதம் மெர்டேக்கா மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருந்த 59 சதவிகித அளவை விட, தற்போது நஜிப்பின் தர மதிப்பீடு  52 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இருந்த 45 சதவிகித அளவை நெருங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

பெட்ரோல் விலை, சீனி விலை, பொருட்கள் மற்றும் சேவை வரி (GST), மின் கட்டணம் ஆகியவற்றை அரசாங்கம் உயர்த்தத் தொடங்கிய போது, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று மெர்டேக்கா மையம் தெரிவித்துள்ளது.

அனைத்து இன மக்களிடமும் நஜிப்பின் மதிப்பு குறைந்துள்ளது என்றும், குறிப்பாக இந்தியர்களிடம் அதிகமாகக் குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மேலும், இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் 67 சதவிகிதத்தினர் பொருளாதாரம் குறித்து தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர், பொதுத்தேர்தல் முடிந்து 3 மாதங்கள் கழித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் நஜிப்பின் அங்கீகார மதிப்பீடு 62 சதவிகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.