Home One Line P1 கெந்திங் பூங்கா 800 மில்லியன் அமெரிக்கா டாலர் வரை செலவு

கெந்திங் பூங்கா 800 மில்லியன் அமெரிக்கா டாலர் வரை செலவு

636
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெந்திங் மலேசியா பெர்ஹாட், இன்று அதன் வெளிப்புற பூங்காவான கெந்திங் ஸ்கைவேர்ல்ட்ஸின் (Genting SkyWorlds) சின்னத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பூங்காவிற்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவிடப்பட்டதாக அது கூறியது.

“இது எங்களுக்கு பல ஆண்டுகள் எடுத்தது. ஆனால், முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் பூங்காவை உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தோம். இது திறக்கப்படுவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம், ” என்று ரிசோர்ட்ஸ் வேல்ட் கெந்திங் வணிக நடவடிக்கைகள் மற்றும் உத்திகள் தலைவர் லீ தியாம் கிட் இன்று ஒரு மெய்நிகர் சந்திப்பில் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் கிட்டத்தட்ட தயாராக இருக்கிறோம். தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பூங்கா என்று நாங்கள் நம்புகின்ற இந்த அற்புதமான பூங்காவில் இறுதிக் கட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன, ” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இது பொதுமக்களுக்குத் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்போது நிறைவடையும் இறுதி கட்டத்தில் உள்ளது.