Home One Line P1 500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியது

500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியது

613
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஐந்து வாசகர்களின் கருத்துக்கள் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசு நீதிமன்றம் விதித்த நீதிமன்ற அவமதிப்புக்காக 500,000 ரிங்கிட் அபராதத்தை மலேசியாகினி செலுத்தியுள்ளது.

அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரேமேஷ் சந்திரன், இன்று காலை புத்ராஜெயாவில் முழு தொகையை செலுத்தினார். நிதி திரட்டல் தொடங்கப்பட்ட 5 மணி நேரத்தில் தேவையான பண கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

“மலேசியாகினிக்கு தாராளமாக ஆதரவளித்ததற்கும், பங்களித்ததற்கும் எங்கள் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த அபராதத்தை மூன்று நாட்களுக்குள் தீர்க்க முடிந்தது. எங்களுக்கு கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கினிடிவிக்கு பிரேமேஷ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஐந்து மணி நேரத்திற்குள் நாங்கள் 500,000 ரிங்கிட் வசூலிக்க முடிந்தது என்பதில் நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். இப்போது இன்னும் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 750,000 ரிங்கிட் வரை சென்றுள்ளது. இது எங்கள் வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நல்லெண்ணத்தைக் குறிக்கிறது,” என்று அவர் கூறினார்.

மீதமுள்ள பணத்தை எவ்வாறு செலவழிக்கப்படும் என்பதை மலேசியாகினி ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.