கோலாலம்பூர்: மலேசியாகினி 500,000 ரிங்கிட் நிதி திரட்டும் இலக்கை ஐந்து மணி நேரத்திற்குள் அடைந்துள்ளது.
அதன் வாசகர்களின் அவமதிக்கும் கருத்துக்களுக்கு, மலேசியாகினியை கூட்டரசு நீதிமன்றம் பொறுப்பேற்று அபராதமாக 500,000 ரிங்கிட் செலுத்த நிதி திரட்டலை ஏற்படுத்தியது.
அனைத்து பங்களிப்புகளும் கணக்கிடப்படும் என்றும் மலேசியாகினி வெளிப்படையானதாக இருக்கும் என்று கூறியது. மலேசியாகினி இன்னும் உபரி நிதியை எவ்வாறு செலவு செய்வது என்று ஆலோசித்து வருகிறது.
மலேசியாகினி தலைமை நிர்வாக அதிகாரி பிரேமேஷ் சந்திரன் வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தார்.
மலேசியாகினி எந்த அச்சமும் இன்றி தொடர்ந்து செய்திகளை வெளியிடும் என்றும், மக்களின் குரல் கேட்கப்படுவதை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் கூறினார்.