Home One Line P1 கெராக்புடாயா நிறுவனத்தின் 2 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன

கெராக்புடாயா நிறுவனத்தின் 2 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன

483
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸின் நினைவுக் குறிப்பு நூலின் வெளியீட்டாளரை காவல் துறை இன்று மீண்டும் விசாரித்தது. இது மூன்றாவது முறையாக இப்புத்தகம் குறித்த விசாரணை நடக்கிறது.

இம்முறை ஜிபி கெராக்புடாயா எண்டர்பிரைஸ் செண்டெரியான் பெர்ஹாட்டின் இரு கணினிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மலேசியாகினியிடம் பேசிய கெராக்புடாயா நிறுவனர் சோங் டன் சின், காவல் துறையினரின் வருகை தோமஸ் எழுதிய ‘மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்’ புத்தகத்துடன் தொடர்புடையது என்பதை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“இன்று காலை 11 மணியளவில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் வந்தார்கள். அவர்கள் எங்கள் கணினிகளை பறிமுதல் செய்தனர்,” என்று சோங் கூறினார்.

இருப்பினும், எந்த புத்தகங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். முன்னதாக புத்தகக் கடையில் இருந்து புத்தகத்தின் நகல்களை காவல் துறையினர் வாங்கியதாக அவர் கூறினார்.