கோலாலம்பூர்: மலேசியாகினி செய்திதளத்தில் வெளியான கருத்துகள் நீதித்துறை அவமதித்ததாகக் கூறி நேற்று அந்நிறுவனத்திற்கு 500,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து பல அம்னோ தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் ரஸ்லான் ரபி மற்ற ஊடக அமைப்புகளுக்கும் இது ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கூறினார். இது ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக தெரிவித்தார்.
“இந்த மிகப்பெரிய தண்டனை. ஒரு முன்னுதாரணமாக மாறும். நாங்கள் மலேசியாகினியைப் பற்றி கவலைப்படுவது மட்டுமல்லாமல், முகநூல் , இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் பிற ஊடகங்களை வைத்திருப்பவர்களைப் பற்றியும் கவலைப்படுகிறோம். இவர்களுக்கும் நீதிமன்றங்கள் அபராதம் விதிக்குமா? நமக்கு இனி சுதந்திரம் இல்லாதது போல உள்ளது. சுதந்திரம் என்பது தேசிய பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தலாக இருக்காத வரை, பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். பேச்சு சுதந்திரத்தை தடுக்க வேண்டாம்” என்று அவர் தொடர்பு கொண்டபோது மலேசியாகினியிடம் கூறினார்.
சக உச்சமன்றக் குழு உறுப்பினர் அர்மண்ட் ஆஷா அபு ஹனிபா கூறுகையில், பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மறுக்கவில்லை, ஆனால் பத்திரிகை சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் நம் நாட்டில் உறுதிப்படுத்தப்படுகிறது என்று நம்புகிறேன். பத்திரிகை சுதந்திரத்தை அல்லது மக்களின் பேச்சு சுதந்திரத்தை நாங்கள் குறைக்கக்கூடாது, ஏனெனில் அது அவர்களின் உரிமை. அவர்கள் இனக் கலவரங்களைக் கொண்டுவரவோ அல்லது நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்காமல் இருக்கும் வரை, அவர்களின் உரிமைகளை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன், ” என்று அவர் கூறினார்.