கோலாலம்பூர்: மைசெஜாதெரா கைபேசி செயலியில் கொவிட் -19 தடுப்பூசிப் பெற மலேசியர்கள் இப்போது பதிவு செய்யலாம். தடுப்பூசிக்கான பதிவு செயலி ஐஓஎஸ் மற்றும் அன்ட்ரோய்டு பதிப்புகளில் கிடைக்கிறது.
இருப்பினும், பயனர்கள் மைசெஜாதெரா செயலியை அவ்வாறு செய்வதற்கு முன்பு புதுப்பிக்க அல்லது பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தடுப்பூசி பொத்தானை அழுத்திய பிறகு, அது உங்கள் அடையால அட்டை பெயர் மற்றும் எண்ணை உறுதிப்படுத்தும்படி கேட்கும். உறுதிசெய்யப்பட்டதும், தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் தற்போது முன்னணி பணியாளர்களுக்கு கட்டம் 1 மட்டத்தில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
அடுத்த கட்டம் தொடங்கும் போது உங்களுக்கு அறிவிக்கப்படும் என்று அது கூறுகிறது.
2021 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை கட்டம் 1- முன்னணி பணிக்குழு, அமலாக்க அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் 50,000 பேர் சம்பந்தப்பட்ட உயர் ஆபத்துள்ள ஆசிரியர்களுக்கானது.
கட்டம் 2 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நடத்தப்படும். இதில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், அதிக ஆபத்துள்ள குழு மற்றும் ஊனமுற்றோர் 9.4 மில்லியன் மக்கள் உள்ளனர்.
கட்டம் 3 மே 2021 முதல் பிப்ரவரி 2022 வரை மலேசியாவின் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு – குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் – 13.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இலக்காகக் கொண்டது.