Home One Line P1 ‘பெர்சவரன்ஸ்’ தரையிறங்கிய காணொலியை வெளியிட்ட நாசா

‘பெர்சவரன்ஸ்’ தரையிறங்கிய காணொலியை வெளியிட்ட நாசா

708
0
SHARE
Ad

கலிபோர்னியா: ‘பெர்சவரன்ஸ்’ விண்கலன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் காட்சிகளை காணொலி ஒன்று மூலம் வெளியாக்கி உள்ளது.

‘பெர்சவரன்ஸ்’ சக்கரங்கள் செவ்வாய் மண்ணில் பதியும் வரை அது காட்சிகளை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி, நாசா, ‘பெர்சவரன்ஸ்’ விண்கலனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. பழங்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக இந்த ரோவர் விண்கலத்தை நாசா அனுப்பி வைத்தது.

#TamilSchoolmychoice

செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை இந்த விண்கலம் ஆய்வு செய்யும்.