Home One Line P1 அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்

அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்

432
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்தாண்டுக்கான அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

அதன் பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், கூட்டம் நேருக்கு மற்றும் மெய்நிகர் மூலமாக நேர் நடைபெறும் என்றுகூறினார்.

“ஆண்டு பொதுக் கூட்டத்தின் தேதி 27 மற்றும் 28 மார்ச் (சனி மற்றும் ஞாயிறு) என்று அம்னோ உச்சமன்றக் குழு முடிவு செய்துள்ளது. அனைத்து நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளும் இந்த கூட்டத்தின் போது இணங்கப்படும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டம் முதலில் கோலாலம்பூரில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டது.

பெர்சாத்துவுடனான கட்சியின் தளர்வான உறவைத் தொடர்ந்து, பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு தீர்மானத்தை பெரும்பாலான அம்னோ தொகுதிகள் ஒப்புதல் அளிக்கின்றன.

இந்த முன்மொழிவு உயர்ந்த மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால், கட்சியின் பொதுக் கட்டத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.