Home One Line P1 அவசரநிலை தொடர்பாக குவான் எங்கின் கூற்றை விசாரிக்க புக்கிட் அமான் அழைப்பு

அவசரநிலை தொடர்பாக குவான் எங்கின் கூற்றை விசாரிக்க புக்கிட் அமான் அழைப்பு

471
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: கடந்த மாதம் அவசரநிலை அறிவிப்பு தொடர்பாக நம்பிக்கை கூட்டணி அறிக்கையில், ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் வெளியிட்ட கூற்றுக்காக புக்கிட் அமானில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

லிம் குவான் எங், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அமானா தலைவர் முகமட் சாபு ஆகியோரின் அறிக்கை தொடர்பான விசாரணை நடத்தப்பட உள்ளது என்று வழக்கறிஞர் ஆர்.எஸ்.என் ராயர் கூறினார்.

விசாரணை தொடர்பாக லிம் தனது முழு ஒத்துழைப்பை காவல் துறையினருக்கு அளிப்பார் என்றும் ராயர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஜனவரி 21 தேதியிட்ட நம்பிக்கை கூட்டணி தலைவர் மன்ற அறிக்கையில், ஜனவரி 12 அன்று பிரதமர் மொகிதின் யாசின் அவசர பிரகடனத்தை அறிவித்ததைத் தொட்டுள்ளது.

கொவிட் -19 பரவலைக் குறைக்க தற்போதுள்ள பொது சுகாதாரச் சட்டங்கள் போதுமானதாக இருக்கும்போது ஏன் அவசரநிலை என்பதையும், நாடாளுமன்ற அமர்வுகள் இயங்க வேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கையில் இடம்பெற்றது.