வாஷிங்டன்: 1969- ஆம் ஆண்டில் அப்போலோ 11 சந்திரனுக்கான விண்வெளிப் பயணத்தில் பங்குக்கொண்ட மூன்று விண்வெளி வீரர்களில் ஒருவரான மைக்கேல் காலின்ஸ் 90 வயதில் காலமானார். இது குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
“புற்றுநோயுடன் போரடிய அவர் புதன்கிழமை இறந்தார். அவர் தனது இறுதி நாட்களை நிம்மதியாக, குடும்பத்தினருடன் பக்கத்திலேயே கழித்தார்,” என்று அவர்கள் கூறினர்.
அவரது சகாக்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் சந்திரனில் நடக்கச் சென்றதால் காலின்ஸ் சந்திர சுற்றுப்பாதையில் தங்கியிருந்தார்.
91 வயதான ஆல்ட்ரின் மட்டுமே இப்போது இந்த திட்டத்தில் பங்குக்கொண்டவர்களில் எஞ்சியிருக்கிறார்.