Home நாடு பகாங்கில் அம்னோ- பாஸ் மோதல் இல்லை

பகாங்கில் அம்னோ- பாஸ் மோதல் இல்லை

655
0
SHARE
Ad

குவாந்தான்: 15- வது பொதுத் தேர்தலில் மாநில சட்டமன்றத்தில் தேசிய முன்னணி மற்றும் பாஸ் இடையே எந்த மோதலும் இருக்காது.

மாநிலத்தில் முவாபாகாட் நேஷனல் ஒத்துழைப்பின் அடிப்படையில் இது ஏற்படுத்தப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், பாஸ் மாநில தலைவர் ரோஸ்லி அப்துல் ஜாபரும் புதன்கிழமை கூட்டாக கையெழுத்திட்ட அறிக்கையின் மூலம் ஒப்புக் கொண்டனர்.

வான் ரோஸ்டி மற்றும் ரோஸ்லி ஆகியோரின் கூற்றுப்படி, மாநிலத்தின் நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்காக அரசியல் ஒத்துழைப்பைப் பேண வேண்டும் என்று கருதுவதாகக் கூறினர்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலில் வென்ற மாநில தொகுதிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கான சூத்திரத்தில் இரு கட்சிகளும் ஒப்புக் கொண்டதாகவும், அதே நேரத்தில் நம்பிக்கை கூட்டணியின் கீழ் உள்ள ஒன்பது தொகுதிகளுக்கு மேலதிக கலந்துரையாடல்கள் தேவை என்றும் வான் ரோஸ்டி கூறினார்.

“அம்னோ பகாங் 14- வது பொதுத் தேர்தலில் பாஸ் வென்ற எட்டு இடங்களில் வேட்பாளர்களை களமிறக்க விரும்பவில்லை. பாஸ் தேசிய முன்னணி வென்ற 25 மாநில இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தாது,” என்று அவர் கூறினார் .