புது டில்லி: இந்தியா 200,000 கொவிட்-19 இறப்பு எண்ணிக்கையை எட்டியுள்ளது. பல மருத்துவமனைகளில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பிராணவாயு வசதி நாடு முழுவதும் மிகக் குறைவாகவே உள்ளது. இடைவிடாமல் இடுகாடுகளிலும் பூங்காக்களிலும் சடலங்கள் தகனம் செய்யப்படுகின்றன.
கடந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 300,000 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. புதன்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 360,000- க்கும் மேற்பட்ட புதிய சம்பவங்கள் பதிவாகின. மொத்தத்தில், 17.9 மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து உதவிகள் வரத் தொடங்கியுள்ளது. ரஷ்யா, நியூசிலாந்து மற்றும் பிரான்ஸ் அவசர மருத்துவ உபகரணங்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனாவும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளன.
இருப்பினும், 1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் இந்த உதவி ஒரு குறிப்பிட்ட விளைவை மட்டுமே ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.