Home நாடு 18 வயது வாக்குரிமை: விரைவில் செயல்படுத்தப்படும்

18 வயது வாக்குரிமை: விரைவில் செயல்படுத்தப்படும்

610
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 18 வயது வாக்குரிமை அமல்படுத்தும் வகையில் செயல்படுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இது எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.

நேற்று (ஏப்ரல் 28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

2019- ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்ட கூட்டரசு அரசியலமைப்பின் 119- வது பிரிவின் திருத்தமாக 18 வயது வாக்குரிமையை செயல்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

#TamilSchoolmychoice

“சில சட்ட விதிகள் மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் தொடர்பான பல விஷயங்களை தீர்க்க தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இது மென்பொருள் அமைப்பை தேவைக்கேற்ப புதுப்பிப்பதை உள்ளடக்கியது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மார்ச் 25 அன்று, தேர்தல் ஆணையம் தன்னியக்க வாக்காளர் பதிவு மற்றும் 18 வயது வாக்குரிமை அடுத்த ஆண்டு செப்டம்பர் 1- க்குப் பிறகு மட்டுமே செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம், 18 வயது வாக்களிக்கும் உரிமை குறித்த அரசியலமைப்பு திருத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெற்றது.