Home நாடு கொவிட்-19: தனியார் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை உள்ளது!

கொவிட்-19: தனியார் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை உள்ளது!

478
0
SHARE
Ad
படம்: டாக்டர் குல்ஜித் சிங் – நன்றி டி ஸ்டார்

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் படுக்கையில்லாமல் உள்ளதாக மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் (ஏ.பி.எச்.எம்) தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங் கூறுகையில், இந்த பற்றாக்குறையை பொதுமக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதார சிக்கலைத் தவிர்க்க தொற்று பரவுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

“கடந்த 14 நாட்களில் தனியார் மருத்துவமனைகளில் கொவிட் -19 நோயாளிகள் அனைத்து படுக்கைகளையும் ஆக்கிரமித்துள்ளனர. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட ஐ.சி.யூ படுக்கைகள் கூட தொடர்ந்து நிரப்பப்படுகின்றன. சமீபத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளால் கொவிட் -19 நோயாளிகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில்,” என்று அவர் இன்று காலை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 சம்பவங்கள் நேற்று 3,000 -க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டன.