Home நாடு அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று

அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று

955
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தொடர்பு, பல்ஊடக அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொவிட் தடுப்பூசி போடப்பட்ட அமைச்சர்களில் சைபுடின் அப்துல்லாவுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.

மற்ற ஊடகத் துறை பணியாளர்களுடன் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருப்பதாக அவர் அறிவித்திருந்ததால் அவருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை.

#TamilSchoolmychoice

அவர் மீதான பரிசோதனையின் முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டபோது அவருக்கு தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இருப்பினும் எவ்வாறு அவருக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த விவரங்களை அவரின் அலுவலகம் வெளியிடவில்லை.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சைபுடின் அப்துல்லா கலந்து கொள்ளவில்லை.

ஆகக் கடைசியாக குவாந்தானில் இரண்டு நிகழ்ச்சிகளில் சைபுடின் அப்துல்லா கலந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.