Home நாடு மெலோர் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

மெலோர் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

487
0
SHARE
Ad

கோத்தா பாரு: மெலோர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் யூஸ்னான் யூசுப், 53 இன்று அதிகாலை 2.28 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார்.

இந்த விஷயத்தை அவரது மகன் முகமட் அவுசாய் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

“டாக்டர் யுஸ்னான் அதிகாலை 2.28 மணிக்கு காலமானது வருத்தமளிக்கிறது. இறுதி சடங்குகள் மதியம் 2 மணிக்கு கெத்தேரே மசூதியில் நடைபெறும்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு, அவர் தேசிய இருதய மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் 647 வாக்குகள் பெரும்பான்மை பெற்று மெலோர் தொகுதியை வென்றார்.

இதனிடையே, பொதுத் தேர்தல் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.