Home வணிகம்/தொழில் நுட்பம் செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை நாசா வெற்றிகரமாக பறக்கவிட்டது

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை நாசா வெற்றிகரமாக பறக்கவிட்டது

698
0
SHARE
Ad

கலிபோர்னியா: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தில் சிறிய ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்கவிட்டுள்ளது.

‘இஞ்சினுவிட்டி (Ingenuity)’ என அழைக்கப்படும் இந்த உலங்கூர்தி ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே பறந்தது. ஆனால், மற்றொரு உலகில் இயங்கும் முதல் விமானமாக இது உள்ளதால் நாசா அதனைக் கொண்டாடி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் ஒரு செயற்கைக்கோள் வழியாக இது குறித்த தகவல் வந்தது. எதிர்வரும் நாட்களில் நாசா அதிக சாகச விமானங்களை உறுதியளிக்கிறது.

#TamilSchoolmychoice

பொறியியலாளர்கள் தொழில்நுட்பத்தின் வரம்புகளை சோதிக்க முற்படுவதால், மேலும் இஞ்சினுவிட்டி பறக்கவிடப்படும்.

பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ பள்ளத்தில் தரை இறங்கிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவருடன் இந்த உலங்கூர்தி அனுப்பப்பட்டது.