சென்னை: இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகமானதை அடுத்து அங்கு திரையரங்குகளில் வெளியாக இருந்த திரைப்படங்கள் சில தங்களது வெளியீட்டு தேதியை ஒத்திவைத்துள்ளன.
முன்னதாக, முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையைக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தலைவி’ திரைப்படம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள தலைவி திரைப்படம் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாக இருந்தது.
பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார், சமுத்திரக்கனி, மிர்ணாளினி ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் படமும் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாக இருந்தது. தற்போது தமிழகத்தில் கொவிட்-19 தொற்று அதிகமாக இருப்பதால், எம்ஜிஆர் மகன் படத்தின் வெளியீடு தேதியை ஒத்தி வைத்துள்ளனர்.