கோலாலம்பூர்: புக்கிட் மெர்தாஜாம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம், யுயூஎம் மூத்த விரிவுரையாளர் கமாருல் ஜமான் யூசோப் கூறிய குற்றச்சாட்டுகளால் வருத்தப்படுவதாகவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கமாருல் முன்வைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
“டாக்டர் கமாருல் ஜமான் யூசோப் அவதூறு மற்றும் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் நான் மிகவும் பாதிக்கப்படுகிறேன். ஆனால், ரமலான் மாதத்தை முஸ்லிம்களுக்கான புனித மாதமாக நான் மதிக்கிறேன், ஆகவே, நான் பொறுமையாக இருக்கிறேன். நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டாலும், நான் எதுவும் செய்யவில்லை.
“இருப்பினும், அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். குற்றச்சாட்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பெயரைக் களங்கப்படுத்தியது மட்டுமல்லாமல், அதைவிட ஆபத்தான வகையில், நமது சமூகத்தில் இன மற்றும் மத உணர்வுகளை தூண்டிவிட்டன.
“அவர் அதற்கு வருத்தப்படாமல், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க என்னை சவால் செய்தார்,” என்று அவர் இன்று முகநூல் பதிவில் தெரிவித்தார்.
கமாருல், சிமின் பல்வேறு தொண்டுப் பணிகளை பட்டியலிட்டு, “கிறிஸ்தவ மிஷனரிகளின்” உதவியை ஏற்றுக்கொள்வதில் கவனமாக இருக்குமாறு முஸ்லிம்களை எச்சரித்திருந்தர்.