சொத்துக்களும், பெண்களும் ஒன்று தான். ஒப்பனை இருந்தால் தான் அதன் மதிப்பு கூடும். இல்லையென்றால் அதன் மதிப்பு குறைந்துவிடும் என்று தெங்கு அட்னான் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இயு சொக் தவ், பெண்களின் மதிப்பு என்பது திறமையும், ஆற்றலும் பொறுத்துள்ளது. அவர்களது ஒப்பனையில் அல்ல என்று குறிப்பிட்டார்.
மேலும், பெண்களை சொத்துக்களுடன் ஒப்பிட்டுள்ளது பொருத்தமற்றது என்றும் இயு நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.