Home நாடு ஹீட் இதழ் விவகாரம் : தேசிய செய்தியாளர் சங்கம் கண்டனம்

ஹீட் இதழ் விவகாரம் : தேசிய செய்தியாளர் சங்கம் கண்டனம்

688
0
SHARE
Ad

3cadcfd42b26a08a35e980c8d9a6db65கோலாலம்பூர், டிச 21 – ‘த ஹீட்’ வார இதழ் முடக்கப்பட்டதற்கு எதிராக தேசிய செய்தியாளர் சங்கம் நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இது ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் சிங் சங் சியு, “கடமையை செய்த காரணத்திற்காக ‘த ஹீட்’ இதழை முடக்கியது கண்டிக்கத்தக்கது. ஊடகம் என்பது அரசாங்கத்தின் தவறுகளையும் மக்களிடம் சுட்டிக்காட்ட வேண்டும். மக்கள் நலன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து அவர்களுக்கு தெரிவிப்பது ஊடகங்களின் கடமை” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த  மாதம்  பிரதமர் நஜிப் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா குறித்து சர்ச்சைக்குரிய செய்தியை  வெளியிட்டதற்காக  ’த ஹீட்’ வார இதழ் உள்துறை அமைச்சால் நேற்று காலவரையின்றி முடக்கம் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது